இறையுணர்வு - உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
ரமழான் அள்ளிச் சொரிகின்ற அருள்களும் கொட்டித் தருகின்ற வெகுமதிகளும் இரவு பகலாக அல்லாஹ்வுடனிருக்கும் வாய்ப்பும் ஒரு மனிதன் இறையுணர்வோடு வாழ்வதற்கு கிடைக்கும் அரிய பயிற்சியாகும்.
அது உண்மையில் ஒரு பயிற்சியாக அமைந்து விட்டால் இறையுணர்வுகள் மூலம் பண்பட்ட உள்ளமொன்று உருவாகாதிருக்க முடியாது.
ஒரு நோன்பாளியை அதிகமதிகம் நன்மைகளில் ஈடுபடுத்தும் ஆற்றல் இறையுணர்வுக்கே உண்டு. அல்லாஹ்வின் அருள்களால் ஆகர்ஷிக்கப்பட்டு... அவன் அளிக்கும் வாக்குறுதிகளை நம்பி... அவனது வெகுமதிகளை எதிர்பார்த்து... அவனது தரிசனத்திற்காகக் காத்திருக்கும் உணர்வுகள் தான் நிச்சயம் எண்ணற்ற நன்மைகளை செய்வதின்பால் மனிதனை உந்தித் தள்ளுகின்ற ஊக்குவிப்புகள் ஆகும்.
இந்த உணர்வுகள் பொங்கிப் பிரவாகிக்கும் ஒரு காலமே ரமழான். இந்த உணர்வுகளால் ஒரு மனிதன் தனதுள்ளத்தை ரமழானில் நிரப்பத் தவறினால் அவன் இந்த அருமையான சந்தர்ப்பத்தின் பயிற்சிகளைத் தவற விட்டான் என்பதே பொருள்.
✒️
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
No comments