Breaking News

வைத்தியரின்றி புத்தளம் மாவட்ட மக்கள் அவதி

சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ள மற்றும் அவற்றை  புதுப்பிக்க  புத்தளம் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தில் வைத்திய சான்றிதல் பெற்றுக்கொள்வற்காக வருகை தரும் பொது மக்கள் வைத்திய நிறுவனத்தில் வைத்தியர் இல்லாத நிலையில் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது,


கடந்த 11 ஆம்  திகதி  புத்தளம் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் திறக்கப்பட்ட போதும் இன்று வரை வைத்திய சான்றிதழ் வழங்கப்படவில்லை  இது தொடர்பாக அவ்விடத்தில் கூடியிருந்தவர்களில்  ஒருவர் கருத்து  தெரிவித்த போது


நாம் இங்கு கடமைபுரியும் ஒரு வைத்தியரை தொடர்பு கொண்ட போது  இங்கு கடமை புரிவோர்  வெவ்வேறு பிரதேசங்களிலிருந்து வ்ருகை தரவேண்டும் வவுனியா, அம்பாறை, முல்லைத்தீவு , குருநாகல் போன்ற பிரதேசங்களிலிருந்தது அவர்கள் வருகை தர வேண்டும். அவர்களுக்கு வரமுடியாத நிலையினால் புத்தளம் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தை மூடி இருப்பதாக தெரிவித்தார்.


காலையிலேயே வருகை தரும் சிலாபம், மாராவில, நிக்காவெரட்டிய பிரதேசத்திச் சேர்ந்தவர்கள் பெரும் அசெளகரியங்களுடன் மீண்டும் திரும்பி  செல்லுகின்றனர். நேற்று  புத்தளம் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவன வளவில் ஏற்பட்ட அசாதாரண நிலையைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.    இது தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தமாறு பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். 

நன்றி - புத்தெழில் - 





    

No comments