பண்பாட்டு பாசறை - உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
உயர்ந்த பண்பாடுகளால்தான் சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்று வரலாறு சான்று பகர்கிறது. அதேபோல கீழுணர்வுகளாலும் காழ்ப்புணர்வுகளாலும் கட்டியதை இடிக்க முடியுமேயன்றி உடைந்ததை நிர்மாணிக்க முடியாது என்பதை சமூக களத்தில் உள்ளவர்கள் உணரவேண்டும்.
நோன்பு நோற்று பசித்திருப்பவனுக்கு உணவும் குடிப்பும் எப்படி ஹராமோ, அதேபோல நோன்பு நோற்ற சமூகத்துக்கு பண்பாடில்லாமல் வெளிவருகின்ற கீழுணர்வுகளும் கால்ப்புணர்வுகளும் அவற்றினடியாக எழுகின்ற வார்த்தைகளும் நடத்தைகளும் ஹராமானவையே.
உணவை பார்த்து ஒரு நோன்பாளி "நான் நோன்பாளி" என்று சொல்வது போல, எழுந்து வரும் அசிங்கமான உணர்வுகளைப் பார்த்தும் ஒருவர் "நான் நோன்பாளி" என்று சொல்லாவிட்டால் அவர் பசித்திருப்பதும் தாகித்திருப்பதும் வீணானதே.
பசியோடும் தாகத்தோடும் நோற்கின்ற ஒரு சம்பிரதாய நோன்பாக அன்றி உத்தமங்களையும் உயர்ந்த பண்பாடுகளையும் கட்டிக்காக்கின்ற ஒரு இலட்சிய நோன்பாக அதனை நோற்க முயல்வோம்.
✒️
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
No comments