வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி
🌐 MADURAN KULI MEDIA🌐
16-05-2020
WEATHER ALERT
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்றைய தினமும், 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
நேற்றைய தினத்தில் நாட்டின் பல பாகங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கலிகமுவ பிரசேத்தில் 214 மில்லிமீற்றர் அளவில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை, களனி கங்கை, ஜின் கங்கை, களு கங்கை, அத்தனகல ஓயா மற்றும் மா ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
களனி கங்கையின் நோர்வூட் மற்றும் கித்துல்கலை பகுதிகளில் நீர்மட்டம் அவதானம் மிக்க நிலையை அடைந்துள்ளது.
களு கங்கையின் இரத்தினபுரி பகுதியில் அவதானம் மிக்க நிலை உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தி;ன் புதுப்பிக்கப்பட்ட அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி ஆசிரியர்
S.M.M.SHAFAQ (JAWADHI)
No comments