Breaking News

கோவிட் 19 கொரோனாவுடன் ரமழான்

ஸஹர் செய்து விட்டு அனைவரும் தூங்க,
விடியலைக் காண நான் வெளியே  வந்தேன்.....
பறவைகளின் சுறுசுறுப்பான உரையாடல்கள் எனது காதோரம் கேட்கிறது...அவற்றின் குரலிலும் ஓர் இனிமை..,இறைவனின் படைப்புகள் எல்லாமே அழகுதான்..
பூக்களின் இயற்கையான நறுமணம்,மனிதன் உருவாக்கும் வாசனைத்திரவியத்திற்கு முன்னால் தோற்றுத்தான் போகிறது - நிதர்சனமான உண்மை...

கடந்த ரமழானை சிறிது எண்ணிப் பார்க்கிறேன்... இவ் 
ரமழானை விட அது முற்றிலும் வேறுபட்டது...
ம்ம்ம்...வீடு கழுவி, சுத்தம் செய்து, றமழானை வரவேற்க கூட நேரமில்லாமல் இருந்தது..
உண்மையில், நோன்பு நோற்றோம் என்பதை விட, பசியோடு மட்டும் இருந்தோம் எனலாம்...உண்மையில்தான்..
ரமழானுக்குரிய கடமைகளை நிறைவேற்ற நாம் தவறி விட்டோம்..
அல்ஹம்துலில்லாஹ் மீண்டும் ஒரு ரமழான் கிடைத்துள்ளது.....,

இவ்வருட ரமழான் உண்மையில் மாறுபட்டதாய் கிடைத்துள்ளது- அல்ஹம்துலில்லாஹ்...
இம்முறை சந்தோஷமாக குடும்பத்துடன் சஹர் செய்கிறோம்-ஒற்றுமையாக...
சஹர் முடிய சிறிது தூக்கம்-எழும்பியதும் வீட்டில் குர்ஆன் ஓதும் சத்தம்-போட்டி போட்டு ஓதுகிறோம்!யார் முதலில் குர்ஆன் முழுவதும் முடிப்பதென்று..-உண்மையில் இதில் சந்தோஷமே...அல்லாஹ்வும்   மகிழ்ச்சி கொள்வான்...

உரிய நேரத்தில் ஐங்கால தொழுகைகள் தொழப்படுகின்றன...தொழுகையில் அசட்டை செய்தவர்களும்,தொழப்பழகி விட்டனர்- வீட்டில் இருந்து பழகி..
குர்ஆன் ஓத நேரமில்லை என்று கூறியவர்கள்..,இன்று தினமும் ஓதுகிறார்கள்..மாஷா அல்லாஹ்...

இப்தாருக்கு கடையில் வாங்குவோம்,என்ற தாய்மார்கள்-இன்று அவர்களால் முடிந்ததை வீட்டிலே செய்கிறார்கள்.,பிள்ளைகளுடன் சேர்ந்து....என்ன ஒரு மாற்றம்...
நோன்பு திறக்கவே நேரமில்லை என்று சதா உழைத்துக் கொண்டேயிருந்த வாப்பாமார்கள்-இன்று சந்தோஷமாக வீட்டில் இப்தாருக்கு  ஏற்பாடு செய்கிறார்கள்....உண்மையில் இவ்வருட ரமழான் வேறுபட்டது தான்....

பர்ளு தொழுகையைக் கூட முறையாக தொழாதவர்கள்-சுன்னத் தொழுகைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள்.-  மாஷாஅல்லாஹ்....
பல வீடுகளில் இன்று குடும்பத்துடன் ஜமாஅத்தாக தொழுகின்றனர்...
இந்த அமல்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக.. ஆமீன்..மஸ்ஜித்கள் பூட்டப்பட்டிருந்தாலும்,,முஸ்லிம் வீடுகள் மஸ்ஜித்களாக மாற்றம் பெற்று விட்டன...உண்மை தான்..

எனக்குள் ஒரு நம்பிக்கை-நிச்சயமாக கொரோனாவிலிருந்து அல்லாஹ் உலகை மீட்டுத் தருவான் என்று...
தொழுகையைக் கொண்டும்,பொறுமையைக் கொண்டும் உதவி கேட்டுக் கொண்டே இருப்போம் அவனிடம்..
உண்மையில் அவன் தர நினைத்ததை எவராலும் தடுக்க முடியாது...,அவன் தடுத்ததை எவராலும் தர முடியாது....அவன் கொடையாளிக்கு எல்லாம் கொடையாளி......

அடுத்த ரமழானும் இவ்வாறே அமல்ககளுடன் கழிய துஆ கேட்போம்...-ஒரு முறைதான் அவன் கற்றுத் தருவான்,,நாம் தான் ஆயுளுக்கும் கற்றதை நடைமுறைப்படுத்த வேண்டும்....
நோயை தருபவனும்,குணப்படுத்துபவனும் அவனே..
நோய்க்கு பயப்படாமல்,அல்லாஹ்வுக்கு மட்டும் பயந்து நல்லமல்கள் செய்வோம்....நிச்சயமாக துன்பத்துடன் தான்,இன்பம் இருக்கிறது....அவனிடமே மண்டியிடுவோம்........
அவன்தான் அல்லாஹ்......!!

                      
ஆக்கம் - பின்த் சமூன்



No comments