Breaking News

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (17) நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த மாவட்டங்களில் எதிர்வரும் 16 ஆம் திகதி இரவு 8 மணி முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் காணப்படும்.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு 18 ஆம் திகதி முதல், 23 ஆம் திகதி வரை இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை அமுலில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments