கொரோனாவால் 10ஆவது மரணம் பதிவு
இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
திருகோணமலையிலுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 வயதான பெண்ணொருவரே கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளாரென, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
குவைட்டிலிருந்து வருகைத் தந்த இவர், இருதய நோயாளி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments