Breaking News

புத்தளத்தில் பிரதேச செயலகங்கள் இரவு 10 மணி திறந்திருக்கும்

புத்தளம் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் காரியாலயம் 03 இன்று  ( 11 ) முதல் இரவு 10 மணி வரையும் 04 பிரதேச செயலாளர் காரியாலயங்கள் இரவு 8 மணி வரையும் திறக்கப்பட்டிருக்கும் என்று புத்தளம் மாவட்ட செயலாளர் எஸ். பண்டார தெரிவித்துள்ளார்.

அதேவேளை பிரதேச செயலாளர் கோட்டக் காரியாலயம் இரண்டும் உதவி காரியாலயங்கள் எட்டும் ஆரம்பிப்பாதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்  புத்தளம் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.


வென்னப்பு, தங்கொட்டுவ, மகவெவ பிரதேச செயலக காரியாலங்கள் இரவு 10 மணி வரையும்  கல்பிட்டி. கருவலகஸ்வெவ , ஆனமடு, புத்தளம் பிரதேச செயலக காரியாலயங்கள் இரவு 8 மணி வரையும் திறக்கப்பட்டிருக்கும் .. நவகத்தேகம , பள்ளம, முந்தல் பிரதேச செயலாளர் காரியாலயங்கள் மாலை 6 மணி வரையும் ஆராச்சிக்கட்டு, மகாகும்புக்கடவல  , வண்ணாத்தவில்லு , நாத்தாண்டிய பிரதேச காரியாலயங்கள் மாலை 5 மணி வரையும் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.


.அதேவேளை வென்னப்பு பிரதேச செயலாளர் கோட்டத்திற்குள் 5 உதவி காரியாலயங்களும்  தங்கொடுவ பிரதேச செயலாளர்   கோட்டத்திற்குள் 03 உப காரியாலயங்களும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பொது மக்களின் தேவைக்கேற்ப பிரதேச செயலாளர் காரியாலங்கள் திறக்கப்படும் நேர மாற்றங்கள்  பற்றி பின்னர் தீர்மானிக்கவும் என்றும் அவர் தெரிவித்தார். 

நன்றி - புத்தெழில் -




No comments