WHO நியதியின் படி உடல்களை அடக்கம்செய்ய அனுமதிக்க சஜித் வலியுறுத்து - விமல், கம்மன்பில எதிர்ப்பு
உலக சுகாதார நிறுவனத்தின் நியதிகளின் படி, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை, அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கும், அரச தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுக்களின் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
எனினும் குறித்த சந்திப்பில் பங்கேற்ற விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை, ஒருபோதும் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது.
அமுலில் உள்ள சுற்றுநிருபத்தின் படி, கொரோனாவினால் மரணித்த உடல்களை அடக்கம் செய்ய முடியாது, எரிக்கவே வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
சந்திப்பில் பங்கேற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
No comments