Breaking News

கல்பிட்டி பகுதி விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு; ஆப்தீன் எஹியா நடவடிக்கை

கல்பிட்டி பகுதி விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பில், முன்னாள்  மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா பிரதேச செயலாளருடன் விஷேட பேச்சு!

கல்பிட்டி பிராந்திய விவசாயிகள் சிலர் இன்று (3) முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா அவர்களை தொடர்புக்கொண்டு தங்களின் விவசாயங்களை முன்னெடுக்க உரம் தேவையுள்ளதாகவும், உரங்களை விநியோகிக்கும் கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், உரத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து உடனடியாக கல்பிட்டி பிரதேச செயலாளரை ஆப்தீன் எஹியா தொடர்பு கொண்டு உரையாடினார்.

இவ்வுரையாடலில்,

நுரைச்சோலை என்பது விவசாயத்திற்கான மத்திய நிலையமாக காணப்படுகின்றது. இதுவே நாடு பூராக விவசாய உற்பத்தி பொருட்களை விநியோகிக்கும் பாரியளவிலான விவசாயிகளைக் கொண்ட ஒரு பிரதேசமாகும்.

விவசாயம் என்பது அத்தியவசியப்பொருளாகும். விவசாயிகள் பாரியளவில் உடலாலும் பணத்தாலும் முதலீடுகளையிட்டும் அவர்கள் மிகக்குறைந்த விலையிலேயே உற்பத்தி பொருட்களை சந்தையில் விநியோகிக்கின்றனர்.

அவ்வாறு விநியோகித்து பணத்தை பெற்று திரும்பி செல்லும் போது அவர்களால் விவசாயத்திற்கு தேவையான உரங்களை பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.

உரக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. எனவே விவசாயம் அழிவதற்கான அபாயகரமானதோர் நிலை உருவாகியுள்ளது.

இதனால் விவசாய உற்பத்தி பொருட்களின் பற்றாக்குறை எழுவதற்கான வாய்ப்புள்ளது.

தயவு செய்து நுரைச்சோலை மத்தியில் அமைந்துள்ள விவசாயிகள் உரங்களை  பெற்றுக்கொள்ளுவதற்காக உரக்கடைகளை திறக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள், குறைந்தது நுரைச்சோலை சந்தையிலுள்ள உரக்கடையையாவது திறக்க நடவடிக்கையெடுங்கள் என வேண்டிக்கொண்டார்.

இதேவேளை ஆப்தீன் எஹியாவின் கோரிக்கையின் நியாயத்தை ஏற்ற கல்பிட்டி பிரதேச செயலாளர் உடனடியாக மேல்மட்டங்களுடன் பேசி இதற்கான தீர்வினை பெற்றுத்தர உதவுவதாக வாக்குறிதியளித்துள்ளார்.



No comments