கொரோனா தொற்று தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் உள்ளூராட்சி மன்றங்களின் தலைமைகளுக்கு பொறுப்பளிப்பு..!
அதிவிஷேட வர்த்தமானி வெளியீடு..!
தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டம், அத்துடன் இக்கட்டளைச் சட்டத்தின் மீது 25.03.2020 அன்று சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்ட 2168/6 ம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி என்பனவற்றின் ஏற்பாடுகளிற்கிணங்க உள்ளூராட்சி மன்றங்களின் ஆள்புல எல்லைக்குள் Covid-19 (கொரோனா) தொற்று தொடர்பில் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய முறையான அதிகாரியாக அல்லது தகுதிவாய்ந்த அதிகாரியாக குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் செயற்பட வேண்டும்.
அதனடிப்படையில் மாநகர சபை எல்லையினுள் அம்மாநகர முதல்வரும் நகர சபை எல்லையினுள் அந்நகர சபைத் தவிசாளரும் பிரதேச சபை எல்லையினுள் அப்பிரதேச சபை தவிசாளரும் தகுதிவாய்ந்த அதிகாரியாக செயலாற்ற வேண்டும்.
இதன்படி புத்தளம் நகர சபை எல்லைக்குள் Covid-19 நோய்த் தொற்றிலிருந்தான மக்களின் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் சம்மந்தமாக தீர்மானங்களை மேற்கொள்ளும் தத்துவம் புத்தளம் நகர முதல்வருக்கே பொறுப்பளிக்கப்பட்டிருக்கிறது.
Post Comment
No comments