Breaking News

நிவாரணங்கள், கொடுப்பனவுகளை மக்களுக்கு வழங்குவதில் அசம்மந்த போக்கு - ஆப்தீன் எஹியா குற்றச்சாட்டு

மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் வழங்கும் சுற்று நிரூபம் தீர்வல்ல : நிவாரணங்கள், கொடுப்பனவுகளை மக்களுக்கு வழங்குவதில் அசம்மந்த போக்கு :-முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா குற்றச்சாட்டு!

கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு மேலாக கல்பிட்டி பிரதேச செயலகம், முந்தல் பிரதேச செயலகம், புத்தளம் மக்கள் பட்டினியின் அகோரத்திற்கு உள்ளாகியுள்ளனர் என முன்னாள்  மாகாண சபை உறுப்பினர் மாவட்ட செயலாளரை தொடர்புகொண்டு தெரிவித்தார்.

கொரோனாவிலிருந்து எமது மக்களை பாதுகாக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. இவ்வாறானதோர் சூழ்நிலையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மக்கள் ஏற்று பங்களிப்பு செய்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் மக்களின் அன்றாட வாழ்க்கை, அந்த மக்களின் பொருளாதாரம் அத்தியவசிய உணவுகளை கருத்திலெடுக்காது, செயற்படுவது கண்டிக்கத்தக்கது. என்பதை சுட்டிக்காட்டியதோடு,

முச்சக்கரவண்டி ஓட்டுனர், கூலித்தொழிலாளிகள், என பலர் இன்று வருமானமின்றி முடக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் அரசாங்கம்  அறிவித்ததைப் போல  இதுவரை எந்தவிதமான மானியங்களும் மக்களுக்கு வழங்கப்படவில்லை,

ஒரு சராசரி குடும்பத்திற்கு மாதாந்தம் 30000/- ரூபா தேவை ஆனால் அரசாங்கம் மக்களுக்கு கடனயே வழங்குகின்றது. அதிலும் அசம்மந்தப்போக்கு
 சமூர்த்தி பெறுவோருக்கு இன்னும் 10000/- ரூபா கடன் கொடுப்பனவை முழுமையாக வழங்காமல் சில பகுதிகளில் மாத்திரம் 5000/- ரூபா வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக எதுவும் வழங்கப்படவில்லை.

மானியமாக 5000/- ரூபா கொடுப்பனவுக்கான சுற்றுநிரூபனம் வெளியாகியுள்ளது. இதுவரை கொடுக்கப்படவில்லை, 

அதுமட்டுமல்லாமல் எங்களுடைய பிரதேசத்திலே தும்பு தொழிற்சாலைகள் அதிகமானோரின் தொழிலாக காணப்படுகின்றது.

பல ஏழைக்குடும்பங்கள் இந்த தொழிற்சாலைகளிலேயே தினம் தினம் உழைத்து வாழ்வாதாரத்தை கொண்டு செல்கின்ற நிலையில், அதே நேரம் இந்த ஊரடங்கு சட்டத்தினால் தொழிற்சாலைகளின்  முதலாளிமாரும், தொழிலாளிமாரும் அவர்களின் குடும்பங்களும் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.இவர்களுக்கான எந்த கொடுப்பனவுகளோ நிவாரணங்களோ இதுவரை வழங்கப்படவில்லை, 

பல நோக்கு கூட்டுறவு சங்கம், சத்தோச போன்ற அரச நிறுவனங்கள் இந்த நேரத்தில் அத்தியவசியப்பொருட்களை குறைந்த விலைகளில் வழங்க வேண்டும். அவர்களும் இந்த நேரத்தில் வியாபார நோக்கில் கூடிய விலையில் பொருட்களை விநியோகிப்பதையும், தங்களின் சினேகிதத்துக்குறியவர்களுக்கு விநியோகிப்பதையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.எனவே இதனை அரச மேல்மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.

என தனது கோரிக்கைகளை முன்வைத்தார். 

இதனைத்தொடர்ந்து தான் இந்த கோரிக்கைகளை குறிப்பெடுத்ததாகவும் விரைவில் நல்லதோர் தீர்வை வழங்குவதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.




No comments