இனவாதிகளல்லாத, கௌரவம் மிக்க மருத்துவர்கள் அங்கத்துவம் வகிக்கும் சங்கம் என்பதை அரச மருத்துவர் சங்கம் நினைவில் கொள்ள வேண்டும்.
இனவாதிகளல்லாத, கௌரவம் மிக்க மருத்துவர்கள் அங்கத்துவம் வகிக்கும் சங்கம் என்பதை அரச மருத்துவர் சங்கம் நினைவில் கொள்ள வேண்டும் - முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் சாடல்
அரச மருத்துவர் சங்கம், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் ஆகியன (Information and Communication Technology Agency (ICTA)) இணைந்து தயாரித்ததாக வெளியான கொரோனா சூழ்நிலையிலிருந்து வெளியேறுவதற்கான திட்ட வரைபு எனும் அறிக்கை (GMOA/ICTA COVID-19 Exit strategy – Sri Lanka) கொரோணா தொற்றிலிருந்து நாட்டை பாதுகாக்கும் அறிக்கையாக இல்லாமல் முஸ்லிம் சமூகத்தைக் களங்கப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது மிகவும் வேதனையளிப்பதாகவும் அவ்வறிக்கைக்கு தன்னுடைய பலத்த கண்டனங்களை தெரிவித்து கொள்வதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தனது அறிக்கையில்,
அரச மருத்துவர் சங்கம், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் ஆகியன (Information and Communication Technology Agency (ICTA)) இணைந்து தயாரித்ததாக வெளியான இவ்வறிக்கை ஒரு குறுகிய இனவாத அரசியல் அஜந்தாவுக்கு செய்யப்பட்ட ஒன்றாக இருக்குமோ என சந்தேகம் எழுகிறது.
அரச மருத்துவர் சங்கம் எனப்படுவது இனவாத, மதவாத அமைப்போ அல்லது அரசியல் கட்சிகளின் ஊதுகுழல் இயக்கமோ அல்ல. மாண்பும், கௌரவமும் மிக்க மருத்துவர்கள் அங்கத்துவம் வகிக்கும் ஒரு சங்கம் என்பதை அரச மருத்துவர் சங்கம் நினைவில் கொள்ள வேண்டும்.
இலங்கை வாழ் மக்களிடம் இனவாதத்தை விதைத்து நாட்டை சீரழிக்கும் அறிக்கையாகவே அந்த அறிக்கை வெளியாகியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
அரச மருத்துவர் சங்கம் அந்த அறிக்கையில் முஸ்லிங்களுக்கு எதிராக முன்வைத்துள்ள விடயங்களுக்கு பகிரங்கமாக பூரண விளக்கத்தை அவசரமாக வழங்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.
No comments