நல்லாந்ழுவை நிவாரண சங்கத்திற்கு மதுரன்குளி இணையத்தள ஊடகம் நன்றி தெரிவிப்பு
நல்லாந்ழுவை நிவாரண சங்கத்திற்கு மதுரன்குளி இணையத்தள ஊடகம் நன்றி தெரிவிப்பதில் மகிழ்சியடைகின்றது.
உலகையே பீதியில் ஆழ்த்தி உள்ள கொவிட்-19 வைரஸ் இலங்கை மக்களையும் விட்டுவைக்காது உயிர்களை காவு கொள்ளும் இக்கட்டான இந்த சூழ்நிலையில் மக்களின் வணிகம், பொருளாதாரம், விவசாயம், இவ்வாறு பல வகையிலும் வீழ்ச்சியை கண்டுள்ள நிலையில் இதற்கு தீர்வாக பல நிவாரண அமைப்புகள் மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் புத்தளம் மாவட்டத்திற்கு உட்பட்ட மதுரங்குளி பகுதியில்
நல்லாந்தழுவை எனும் அழகிய குக்கிராமத்தில் நல்லாந்தலுவை நிவாரண சங்கம் எடுத்த கன்னி முயற்சி வெற்றியில் முடிவடைந்துள்ளது.
கொவிட்-19 என அழைக்கப்படும் கொரோனா வைரமஸினால் இந்த புனித ரமழான் மாதத்திலும் மக்களின் ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு மேற்கூறப்பட்ட சங்கம் உடனடி நடவடிக்கை எடுத்த முயற்சியில் ஊர் மக்கள் முழுமையாக பங்களிப்பு செய்துள்ளனர். மக்களின் பங்களிப்பினால் 4,000,000/= இலட்சம் ரூபாய் நிதி சேகரித்து சுமார் 6000/= ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் கிட்டத்தட்ட 600 குடும்பங்களுக்கு நிவாரணம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இவ்இக்கட்டான சூழ்நிலையில் நிதி உதவி செய்த தனவந்தர்கள், ஊர் மக்கள், மேலும் மக்களோடு மக்களாக மும்முரமாக நின்று பங்களிப்பு செய்த சகோதரர்களான முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஆப்தீன் எஹியா, மற்றும் நல்லாந்தழுவை நிவாரண சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் மதுரன்குளி இணையத்தள ஊடகம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த புனித ரமழான் மாதத்தில் நிதியாலும், உடலாலும், உடமையாலும் உதவிகளை செய்த அனைத்து மக்களுக்கும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் மஃபிரத்தும் கிடைத்து நீண்ட ஆயுளுடனும் சௌபாக்கியத்துடனும் வாழ அல்லாஹ்விடம் பிரார்த்திக்க மதுரங்குளி இணையத்தள ஊடாக ஆசிரியர் குலாம் வேண்டிக்கொள்கின்றது.
நன்றி
"ஜஸாக்கமுள்ளாஹ்ஹைறன்".
No comments