Breaking News

பிரதேச செயலகத்தின் ஊடாக அரசு மக்களின் தேவைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும் - பாராளுமன்ற வேட்பாளர் எம்.எஸ்.எம். ஸப்வான்

தனிமைப்படுத்தப்பட்ட ஊர்களுக்கும் ஊரடங்கு காரணமாக அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமப்படும் ஊர்களுக்கும் அந்த வரந்த பகுதி கிராம சேவகர்கள் அனுப்பப்பட்டு நிலமைகள் ஆராயப்பட வேண்டும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் எம்.எஸ்.எம். ஸப்வான் தெரிவித்தார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை அவர் தெரிவித்தார்.

அதில் அவர் மேலும் கூறுகையில்; 

தொடர் ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்புகளுக்கு செல்ல முடியாமையினால் அன்றாட உணவுக்கு கூட கஷ்டப்படும் ஏழை எளிய மக்கள் எம்மில் அதிகமானோர் உள்ளனர்.

கௌரவ ஜனாதிபதி அவர்கள் அறிவித்திருப்பதை போன்று ஒவ்வொரு கிராமங்களுக்கும் அவரது நிவாரணங்களும் சலுகைகளும் உரிய நேரத்தில் உரியமுறையில் போய் சேர வேண்டும்.

எனவே ஒரு கிராமத்தின் மொத்த விபரத்தையும் அறிந்த கிராம சேவகர்கள் இதுகுறித்து நாளாந்த தகவல்களை திரட்டி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக செயற்பட வேண்டிய தேவை உள்ளது.

எனவே அந்தந்த பகுதிகளுக்கு பொறுப்பான கிராம சேவகர்களை பிரதேச செயலகத்தின் ஊடாக அரசு அனுப்பி மக்களின் தேவைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் எம்.எஸ்.எம். ஸப்வான் அரசை வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.



No comments