புத்தளம் அல் காசிம் சிட்டி பகுதியில் 65 பேர் தனிமைப் படுத்தல் கண்காணிப்பு நிலையத்திற்கு
புத்தளம் அல் காசிம் சிட்டி மற்றும் பாலாவி பகுதியில் மறைந்திருந்த 65 பேர் புணானையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்திற்கு நேற்று (09) இரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என புத்தளம் வைத்திய அதிகாரி சந்ரு பெர்ணான்டோ தெரிவித்தார்.
புத்தளம் அல் காசிம் சிட்டி வீடமைப்புத் திட்டத்தில் வசிக்கும் நபர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் அண்மையில் இனங்காணப்பட்டார். குறித்த நபருடன் நெருங்கிப் பழகிய 65 பேரும் மறைந்திருந்த நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் இந்தோனேசியாவில் மத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கடந்த மாதம் 16 ஆம் திகதி நாடு திரும்பியவர் என தெரியவந்துள்ளது.
No comments