Breaking News

கொரோனா பாதுகாப்பு அங்கிகள் 300 இலவசமாக வழங்கி வைப்பு.

🌐 MADURAN KULI MEDIA🌐

2020-04-19 🇱🇰

புத்தளம் மதுரங்குளி முஸ்லீம் ஹேண்ட்ஸ்  அமைப்பின் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக  கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களை பாதுகாக்கும் நோக்கில் 300 கொரோனா  பாதுகாப்பு அங்கிகள்  கையளிக்கப்பட்டுள்ளது.
 
புத்தளம் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கலின் நலன் கருதி இந்த கொரோனா பாதுகாப்பு அங்கிகள் (Personal Protection Kit) வழங்கப்பட்டன.

முஸ்லீம் ஹேண்ட்ஸ் அமைப்பின் பணிப்பாளர் ஏ.எம்.மிஹ்லார் அவர்களினால் புத்தளம் மேலதிக மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பீ. ஹேரத் அவர்களின் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.








No comments