K.A.B. Back ” 100 பேர் இறந்த பின்னரா தனிமைப்படுத்தல் முகாமை அமைப்பீர்கள்..? GA தலைமையிலான கூட்டத்தில் பாயிஸ் குழப்படி !! விரைந்து வருகிறது ராணுவ கோரன்டைன் அணி
K.A.B. Back ” 100 பேர் இறந்த பின்னரா தனிமைப்படுத்தல் முகாமை அமைப்பீர்கள்..? GA தலைமையிலான கூட்டத்தில் பாயிஸ் குழப்படி !! விரைந்து வருகிறது ராணுவ கோரன்டைன் அணி
” நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது எனது மக்களை பாதுகாக்க வேண்டும்..உடனடியாக ஒரு தனிமைப்படுத்தல் முகாமை அமைக்க உதவி செய்யுங்கள்..100 பேர் இறக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்க முடியாது ” என இன்றிரவு நடந்த மாவட்ட செயலாளர் தலைமையிலான கூட்டத்தில் வைத்து புத்தளம் நகர சபைத் தலைவர் காரசாரமாக பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்றைய கொரானா தொற்றாளரான புத்தளத்தை சேர்ந்த ஒருவர் அடையாளப்படுத்தப்பட்டமையை அடுத்து நடந்த இந்தக் கூட்ட்டத்தின் போதே நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
” புத்தளம் ஒரு ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது..அரசாங்க அதிகாரிகளான நீங்கள் அனைவரும் உதவ வேண்டும் உடனடியாக எமக்கு ஒரு தனிமைப்படுத்தல் நிலையம் அவசியம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புத்தளம் மாவட்டச் செயலாளர், முப்படையினதும் உயரதிகாரிகள் , பொலிஸ் மற்றும் பொது சுகாதாரா திணைக்கள அதிகாரிகள் என்போர் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டிருந்தனர்.
ஆரம்பத்தில் பாயிஸின் கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவித்த அதிகாரிகள் பின்னர் ஆளுநர் மற்றும் ராணுவத் தலைமையகம் என்பவற்றோடு தொடர்புக் கொண்டு நகர சபைத் தலைவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிமைப்படுத்தல் நிலையத்திற்கென நகர சபைத் தலைவரால் முன் மொழியப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடல், நகர மண்டபம் என்பனவற்றை கடற்படையினர் நிராகரித்தை அடுத்து புத்தளம் ஸாஹிராக் கல்லூரியின் வகுப்பறைகளை உபயோகிப்பது என்ற முடிவை அனைவரும் ஏகமனதாக எடுத்துள்ளார்கள்.
இதன் அடிப்படையில் புத்தளம் ஸாஹிராத் தேசியக் கல்லூரியில் அமைக்கப்படும் கொரானா தனிமைப்படுத்தல் நிலையத்தில் ராணுவத்தின் கொரன்டைன் படையினர் நாளை முதல் தமது பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.
இன்று மாலை ஸாலிஹீன் பள்ளிவாசல் மஹல்லாவில் நடந்த பரபரப்புக்களின் போது ஆரம்பத்தில் செயலாற்றுவதை போன்று பாவ்லா காட்டிய அதிகாரிகள் திடீரென நகரசபைத் தலைவர் பாயிஸை தனியாக விட்டுவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் நகர்ந்து சென்று விட்டதாக நகர சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி - Puttalamtoday -
No comments