புத்தளம் நகரில் தொற்று நீக்கும் பணிகள்
புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் ஏற்பாட்டில் புத்தளம் தொகுதி பொலிஸாரினால் புத்தளம் பஸ் நிலையம் , வங்கிகள் , கடற் கரை மற்றும் புத்தளம் நகரம் ஆகிய பகுதிகளில் தொற்று நீக்கும் பணிகளை இன்று மேற் கொள்ளப்பட்டது.
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் நாளைய புத்தளம் நகருக்கு வருகை தரும் பொது மக்களின் நலன் கருதி இந்த தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஜீ.எஸ். ஜயமகா , உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்தன ஹேரத் , புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ. குமாரதாஸ ஆகியோரின் மேற் பார்வையில் இந்த பணிகள் இடம் பெற்றன.
நன்றி - புத்தெழில் -
No comments