Breaking News

புத்தளம் பெரிய பள்ளி மூலம் உலர் உணவு விநியோகம்

தொடர்ந்து அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக வறுமை கோட்டில் வாழும் குடும்பங்களுக்கும் தொழிலின்மையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் புத்தளம் பெரிய பள்ளியினால்  உலர் உணவு பொதிகள் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

முதற் கட்டமாக 1500.00  ரூபா பெறுமதியான 150  உலர் உணவு பொதிகள்   34  மஸ்ஜித்களுக்கு பகிர்ந்தளிகப்பட்டுள்ளன.  தொடர்ந்து  இந்த நற்பணியை செய்வதற்கு பொது மக்களின் நிதி உதவியை பெரிய பள்ளி நிர்வாகம் எதிர்பார்க்கின்றது .

பெரிய பள்ளி நிர்வாகத்தினை தொடர்பு கொள்வதன் மூலமோ Mohideen Jumma Masjid   Amana Banak Puttalam Branch  001 - 0001152 - 003   என்ற வங்கி கணக்கீனூடாக பணத்தை   வைப்பு செய்வதன் மூலமோ நிதி உதவிகளை செய்யலாம் . 

மெளலவி எச்.எம். மின்ஹாஜின் வேண்டுகோள்      

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:"வறுமை குப்ருக்(நிராகரிப்புக்)குவழிவகுக்கும்"
இன்றைய புத்தளத்தின் ஊரடங்கு சட்டத்திற்கு பின்னரான நிலை மேற்படி ஹதீஸை உண்மைப்படுத்திவிடுமோ?

வந்தோரை வாழ வைத்த பூமிக்கு இப்படி ஒரு நிலை வருவதா?
எனவே தனவந்தப் பெருமக்களே!மனமுவந்து நீங்களாக சென்று உங்கள் உதவிகளை பணமாகவும்,பொருளாகவும் வழங்குங்கள்! இது புத்தளம் மக்களுக்கான மனித நேய உதவி!

அடுத்த மாதம் விதியாகும் ஸகாத்தை முற்படுத்தி இம்மாதம் வழங்குவதற்கு இஸ்லாமிய ஷரீஆவில் அனுமதி உண்டு.
அவ்வாறே ஸுன்னத்தான ஸதகாக்களையும் வழங்குங்கள்

தர்மங்கள் பாவங்களை அழிக்கும்.ஆபத்துக்களை தடுக்கும்.இன்றே விரையுங்கள்.உதவிக்கரம் நீட்டுங்கள் .உங்ககள் உதவி 10 நாட்களுக்கு ஒருவருக்குப் போதுமானதாக இருக்கட்டும்.உங்கள் உதவி இனம்,மதம்,நிறம் எல்லைகைளக் கடந்ததாக அமையட்டும்(.منهاج)

நன்றி - புத்தெழில் -



No comments