Breaking News

கொரோனா வைரஸ் - கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் விடுதுள்ள் விஷேட அறிவிப்பு!


கத்தார் நாட்டில் கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் கத்தார் நாட்டில் உள்ள இலங்கையர்கள் அனைவரையும் மிகவும் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை தூதரகம் வேண்டிக் கொள்கிறது.


நீங்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகித்தால் உடனடியாக உங்களுக்கு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று பரிசோதித்துக் கொள்ளுமாறு கத்தார் அரசு அறிவித்தல் விடுத்துள்ளது.

அதே நேரம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள விஷேட தொலைபேசி இலக்கம் 16000 துடன் தொடர்பு கொள்வதன் மூலம் தேவையான அறிவுறுத்தல்களை பெற்றுக் கொள்ளுமாறும் கத்தார் அரசு சகல மக்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இது சம்பந்தமாக இலங்கை தூதரகத்தின் மேலதிக அறிவுறுத்தல்களையும் உதவிகளையும் பெற்றுக் கொள்வதற்காக  இலங்கை தூதரகத்தில் 24 மணித்தியால விஷேட தொலைபேசி சேவை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக இணைப்பாளர்.- எம்.எச்.ஆர்.ஏ. இக்ரம் - 00974 74703413

இதற்கு மேலதிகமாக கீழுள்ள தொலைபேசி  அழைப்பு  இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியும்.

தொழிலாளர் ஆலோசகர் -
00974 70088771

இரண்டாவது செயலாளர் -
00974 77455895

மூன்றாவது செயலாளர் -
00974 30511333

நிர்வாக இணைப்பாளர் -
00974 74703413

மக்கள் தொடர்பு அலுவலர் -
00974 31114020


இலங்கை தூதரக காரியாலயம்,
தோஹா - கத்தார்.




No comments

note