கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் இன்று விடுத்துள்ள அறிவிப்பு..!
கத்தார் நாட்டிற்கான இலங்கையின் பதில் தூதுவரும், தூதரக அலுவலர்களும், கத்தார் நாட்டில் வாழும் இலங்கையர்கள் எல்லோரும் சுக நலத்துடன் வாழப் பிரார்த்தனை செய்கிறோம்.
தூதரகம் அர்ப்பணிப்புடன் உங்களுக்கான சேவையை செய்ய தயாராக உள்ளது. ஆயினும் நோய் பரவலை தடுப்பதற்கான நோக்கில், கூட்டமாக வருவதை தவிர்ப்பதற்காக, முன் அனுமதி பெற்று தூதரகத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், கத்தார் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை மிகவும் சிரத்தையுடன்
பின்பற்றி உங்களையும், மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு தூதரகம் உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளது.
தூதரகம் கத்தார் அரசாங்கத்துடன் தற்போதைய சூழ்நிலை சம்பந்தமாக தொடர்பில் உள்ளது. கைத்தொழில் பகுதியில் (Industrial Area) உள்ள இலங்கையர்கள் ஆரோக்கியமாக உள்ளார்கள் என்று தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.
இலங்கை தூதரகம்
தோஹா - கத்தார்
23.03.2020
No comments