Breaking News

அன்பின் புத்தளம் மாவட்ட மக்களே..!! - அஷாம் முஹம்மத்

கொரோனா என்கின்ற covid19 புத்தள நகரத்திற்குள்  நுழைந்து விட்டதனை தாங்கள் அறிந்த விடயமே..!!!

அமைதியிழக்காதீர்கள்,அவசரப்படாதீர்கள்,நிதானத்தை இழந்து விடாதீர்கள். இவ் அவசர சந்தர்ப்பத்தில் பொறுமையுடனும், நிதானமாகவும் எமது செயற்பாடுகளை முன்னெடுத்தால் இச் சோதனையையும் சாதனையாக மாற்றலாம். 

கொரோனா தொற்றானது HIV போன்ற உயிர் கொல்லி நோயல்ல., இலங்கையில் இதுவரை 9 பேர் குணப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இது மாபெரும் வெற்றியாகும் ஆகவே அச்சப்பட தேவையில்லை. இதனை நான் புத்தள நகர மக்களை மாத்திரமன்றி புத்தள மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து மக்களுக்குமான ஓர் விளிப்புனர்வாக எழுதுகின்றேன்.
இச் சந்தர்ப்பத்தில் நாம்...

☆நிதானமாகவும்,பதகளிப்பின்றியும் அமைதியாக இருப்போம். இதுவே எங்கள் முதல் வெற்றியாகும்

☆நாட்டின் அவசர காலச்சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது, சட்டத்தை மதித்து வெளியேறாது வீடுகளில் இருப்போம். தற்போதைய நேரத்தில் மிக அத்தியவசியமான பொருட்களாக இருந்தாலும் பரவாயில்லை; வெளியே செல்லாமல் உயிரை பாதுகாப்பதே முதன்மையானது. அரசின் சட்டத்திற்கு முழுதளவும் கட்டுப்பட்டு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்போம்.

☆சிறுவர்கள்,முதியோர்களுக்கு புத்தள மாவட்டத்தின் அசாதாரண சூழ் நிலமையினை தெளிவுப்படுத்தி வீட்டிலேயே தங்கி இருக்கச் செய்வோம்.

☆நோய் தொற்று அறிகுறிகள் எமக்குள் தென்பட்டால் உடனே எம்மை நாம் தனிமைப்படுத்திக் கொள்வோம் அது தான் நாம் எம் குடும்பத்திற்கும்,எம் நாட்டிற்கும் செய்யும் பெரிய சேவையாகும்.

☆நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனே உரிய அதிகாரிகளை வரவழைத்து அவர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் செயற்படுவோம்., வாட்ஸப் அறிவுரைகளை தவிர்ப்போம். எங்களது பண்டித தனத்தை காட்டுவதற்கான நேரம் இதுவல்ல..

☆புத்தளம் மாவட்டம், கொரோனாவை சுமந்து வரும்  அனைத்து whatsapp, facebook மெசேஜ்களையும் உறுதிப்படுத்தாது பகிர்வதனை நிறுத்துவோம். வதந்தி மூட்டைகள் அள்ளி வீசப்படும்; கவனம் மக்களே..!!! 100% உறுதியற்ற தகவல்களை பகிராமல் இருப்பது தான் நாங்கள் மற்றவர்களுக்கு செய்யும் பெரும் உதவி...

☆இவை அனைத்தையும் விட முதன்மையானது இறைவனுடன் உள்ள உறவை உயிரூட்டி அவனிடம் பிராத்திப்போம். எம்மிடம் உள்ள பயம் எதையும் மாற்றாது ஆனால் அல்லாஹ்விடம் உள்ள நம்பிக்கை அனைத்தையும்  மாற்றும்.

Azam Muhammed
Eastern University.
28.03.2020



No comments