கொரோனா வைரஸ் கண்காணிப்பு மத்திய நிலையமாக மாறுகிறது !புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி
புத்தளத்தில் உயிர் கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்று வெளிநாட்டில் இருந்து வந்த யாத்திரிகர் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து நகரின் இதர நோய்த் தொற்றாளர்களை அடையாளம் காணும் முகமாக தனிமைப் படுத்துவதற்கான நிலையமாக புத்தளம் ஸாஹிராத் தேசியக் கல்லூரி தெரிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று புத்தளத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, புத்தளம் சாஹிரா கல்லூரியை தனிமைப் படுத்தும் நிலையமாக அமைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
இந் நடவடிக்கைகளை மாவட்ட செயலகம், புத்தளம் நகர சபை, முப்படடை மற்றும் பொது சுகாதார பணிமனை ஆகியன இணைந்து முன்னெடுத்து வருகின்றன.
No comments