ஐக்கிய மக்கள் சக்தி அங்குரார்ப்பணம்
பத்து அரசியல் கட்சிகளும் 20 சிவில் அமைப்புகளும் 18 தொழிற்சங்கங்களும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு தாமரைத் தடாகத்தில் இன்று (02) இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் அங்குரார்ப்பண நிகழ்வு கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.
ஜாதிக ஹெல உறுமய சார்பில் அதன் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க, ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் அதன் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் அதன் பொதுச் செயலாளர் சந்திரா சாப்த, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எஸ். சுபைர்தீன், ஐக்கிய சோசலிச முன்னணியின் பொதுச் செயலாளர் கீர்த்தி காரியவசம் ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
அதன் பின்னர் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
அங்குரார்ப்பண நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட 95 வீதமானோர் பங்கேற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
No comments