Breaking News

கொழும்பு, புத்தளம் உட்பட 6 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிக்கும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. 

ஏனைய மாவட்டங்களில் நாளை (30) காலை 6 மணிக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு மீண்டும் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



No comments