4 1/2 வருடம் நேற்றுடன் முடிவடைந்தது ; இன்றல்ல ( பிப்ரவரி 29துடன்) - சட்டமுதுமாணி Y.L.S.ஹமீட்
அரசியலமைப்பு சரத்து 70, “பாராளுமன்றம் தனது முதலாவது கூட்டத்திற்கு குறிக்கப்பட்ட திகதியிலிருந்து 4 வருடங்கள் 6 மாதங்களுக்கு குறையாத காலப்பகுதி முடிவடையாமல் ஜனாதிபதியால் கலைக்கப்படமுடியாது” என்று கூறுகின்றது.
தற்போதைய பாராளுமன்றம் கூடியது 2015 செப்டம்பர் 1ம் திகதியாகும்.
“அந்தத்திகதியில் இருந்து” என்றால் அந்தத்திகதியும் உள்வாங்கப்படவேண்டும். இல்லையெனில் பாராளுமன்றத்தின் ஆயுள் தொடங்குவதற்கு முதல்நாள் பாராளுமன்றம் கூடியதாக பொருட்பட்டுவிடும்.
எனவே, 4 1/2 வருடம் பிப்ரவரி முடிவுடன் நிறைவடைந்துவிட்டது.
பிப்ரவரி 29 இல் முடிந்ததால், அதாவது 30 இல் முடியாததால் ஒரு நாள் மேலதிகமாக கணக்கிடப்பட்டதா?
அவ்வாறாயின் ஐந்துவருட முடிவு செப்டம்பர் 1ம் திகதியில்லாமல் 2ம் திகதி என்பார்களா? அதனால் இவ்வருடம் 367 நாளையா கொண்டிருக்கும்?
சரத்து 70 இல் 4 வருடமும் 6 மாதமும் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர இத்தனை நாட்கள் என்று குறிப்பிடப்படவில்லை. பிப்ரவரி பூர்த்தியானதும் அது 28 நாளாக இருக்கலாம் 29 நாளாக இருக்கலாம். 6 மாதங்கள் பூர்த்தியாகவிட்டன.
எனவே, மார்ச் 2ம் திகதி என்பது பிழையான கணிப்பீடு. இப்பிழையினால் தற்போது எதுவித பிரச்சினையுமில்லை; ஏனெனில் மார்ச் 1ம் திகதியின் பின் ஆகஸ்ட் 31 வரை எப்போதும் கலைக்கலாம். ஆனால் ஒரு வாதத்திற்காக, ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்கும் தனது அதிகாரத்தைப் பாவிக்காவிட்டால் செப்டம்பர் 1ம் திகதி பாராளுமன்றம் சுயமாக கலைந்துவிடும்.
இவர்களின் கணக்குப்படி செப்படம்பர் 2ம் திகதிதான் கலையவேண்டும். அது சட்டப்பிரச்சினையைத் தோற்றுவிக்கும்.
No comments