Breaking News

இலங்கையின் முதலாவது கொரோனா நோயாளியான சுற்றுலா வழிகாட்டி, இன்று (23) பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்நாட்டில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா வைரஸ் நோயாளரான சுற்றுலா வழிகாட்டி முழுவதுமாக குணமடைந்து இன்று (23) காலை வீடு திரும்பியுள்ளதாக IDH வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

அவருக்கு பரிசோதனைகள் பல செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முழுமையாக குணம் அடைந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பின்னர் அவர் வைத்தியசாலையிலிருந்து வௌியேற அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசேட நோயாளர் காவு வண்டியில் அவர் தனது வீட்டை நோக்கி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மேலும் இரண்டு வார காலம் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.







No comments