Breaking News

ஆசிய இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்ள கனமூலை முஹம்மது அஸ்ஜத் மலேசியா பயணம்.

இம்மாதம் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை மலேசியாவில் இடம்பெறவுள்ள உலகலாவிய ரீதியாக பல்வேறு துறைகளை சார்ந்த இளம் நிபுணத்துவம் வாய்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளும் ஆசிய இளைஞர் மாநாட்டில் இலங்கை நாட்டை பிரதிநித்துவப்படுத்தி கலந்து கொள்வதற்காக மதுரங்குளி கனமூலையைச் சேர்ந்த அப்துல் முனாப் முஹம்மது அஸ்ஜத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்ப கல்வியை கனமூலை முஸ்லிம்  மகா வித்தியாலயத்தில் தொடர்ந்த முஹம்மது அஸ்ஜத் பின்னர்  புத்தளம் காஸிமியா அரபுக்கல்லூரியில் அல் ஆலிம் பட்டம் பெற்று உயர் தரத்தில் அதி சிறந்த சித்தி பெற்று யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் வணிக முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயின்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



 

1 comment: