Breaking News

சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவங்களை குறைப்பதற்கு அரசாங்கம் சதி - மன்சூர் எம்.பி.

சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவங்களை குறைப்பதற்கு அரசாங்கம் சதி மிகவும் நேர்மையாக தைரியமாகக் குரல் கொடுக்கக் கூடிய பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்ப வேண்டும். என மன்சூர் எம்.பி. தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலையடுத்து இலங்கை அரசியல் தற்போதைய சூழலில் சிறுபான்மை சமூகங்களின் குறிப்பாக முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களைக் குறைப்பதற்கு தற்போதைய அரசாங்கம் மிகச் சூட்சுமமாக முறையில் நகர்வுகளைச் செய்து வருகின்றதோடு, அவர்களின் வாக்குகளை சிதறடிப்பதற்கான வியூகங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன.

வருகின்ற பொதுத் தேர்தலில் முஸ்லிம் சமூகத்திற்காக மிகவும் நேர்மையாக தைரியமாகக் குரல் கொடுக்கக் கூடிய பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்ப வேண்டும். இல்லையெனில் பின்னர் கைதேசப்பட்டவர்களாக நாங்கள் பார்க்கப்படுவோம். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் நம்பிக்கையாளர் சபைக்குட்பட்ட திட்டமிடல் நிதிப் பிரிவின் சம்மாந்துறை அபிவிருத்தி மன்றத்தினால் சம்மாந்துறையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான :முதன்மைச் திட்டம்” தயாரிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று(02) சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மண்டபவத்தில் சபையின் தலைவர் வைத்திய கலாநிதி எஸ்.எம். இப்றாலெவ்வை தலையைில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தம் உரையாற்றுகையிலே – அடுத்த 5 வருடங்களுக்கு கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம்தான் ஆட்சியே இருக்கும். அவர்கள் நினைப்பதெல்லாம் சட்டமாகும் என்கின்ற விடயத்துக்கு நான் உடன்பாடு இல்லை. ஆனால் இது எப்போது சாத்தியமாகும் எனின் வருகின்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற வேண்டும். அதனை ஒருபோதும் பெற முடியாது.

அதனை 19வது திருத்தச்சட்டம் மூலம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்றத்துக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பாராளுமன்றத்தை எதிர்வருகின்ற தேர்தலில் முஸ்லிம் சரியாகப் பயன்படுத்தத் தவறினால் அரசாங்கம் நினைப்பது போன்று ஓரே நாடு, ஓரேசட்டம் மூலம் அமுல்படுத்த முடியும்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் எந்த வகையிலும் நாட்டு மக்களுக்கு நன்மையானதாக இருக்காது. இந்த அரசினால் ஒருபோதும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெறவும் முடியாது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதையடுத்து சிங்கள பௌத்த தேசியவாதத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாக சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
 எனவே, வருகின்ற பொதுத் தேர்தலில் முஸ்லிம் சமூகத்திற்காக மிகவும் நேர்மையாக தைரியமாகக் குரல் கொடுக்கக் கூடிய பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்ப வேண்டும்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாத், பிரதேச சபை உறுப்பினர்கள், நிறுவனத்தலைவர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் மற்றும் சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.


No comments

note