Breaking News

வெற்றி தோழ்வி என்பதை விட திறமையாக விளையாடுகின்றோமா என்பது தான் முக்கியம் - ஏ.எல்.எம். பாரிஸ்

ஒரு விளையாட்டில் யார் வெற்றி பெறுகிறார்? யார் தோழ்வியடைகிறார்? என்று பார்ப்பதை விட யார் சிறந்தமுறையில் விளையாடுகிறார் என்றே பார்க்க வேண்டும்.

எப்படியும் போட்டி என்று வந்துவிட்டால் வெற்றி மற்றும் தோழ்வி என்பதை நிச்சயம் சந்தித்தே ஆக வேண்டும்.
வெற்றியடைந்தவர் பெருமைப் படுவதும் தோழ்வியடைந்தவர் கவலைப்படுவதும் பொதுவாம் நாம் காணும் யதார்த்தமாக உள்ளது.
எனினும் ஒரு போட்டியாளர் தன்னை திறமையாக பயிற்றுவித்துக் கொள்வதையே கவனத்தில் கொள்ள வேண்டும் என அல்ஹாஜ் ஏ.எல்.எம். பாரிஸ் அவர்கள் தெரிவித்தார்.



எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் கண்டி மாவட்டத்தில் களமிறங்கும் ஏ.எல்.எம். பாரிஸ் அவர்களின் பூரண_அனுசரணையுடன் கடந்த 09.02.2020 ஞாயிற்றுக் கிழமை கண்டி தெய்யன்னவல ஐக்கிய விளையாட்டு களகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2வது 'ஏ.எல்.எம். பாரிஸ் கின்ன' உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஹமீம் முஹம்மத்
செய்தியாளர்,
கண்டி.












No comments

note