Breaking News

நாட்டின் இறையாண்மை, கொள்கைகள், தனிநபர் சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட சகலரும் நம்பிக்கையுடன் உத்துழைப்பு நல்க வேண்டும் : சுதந்திர தின வாழ்த்து செய்தியில் எச்.எம்.எம்.ஹரீஸ் (பா.உ)



சுதந்திரத்தை அடைய நாம் கடினமான, விவேகமான பாதையைத் தேர்ந்தெடுத்தோம் நாம் சுதந்திரத்தை வெள்ளையர்களிடமிருந்து பெற்றதைத் தாண்டி, நாம் தற்போது சுதந்திரம் என நினைத்து நாம் செய்யும் செயல்கள், பழகும் பழக்கத்தை ஆராயக்கூடியதாக பார்க்கப்படுகின்றது என்பதை நாம் உணர வேண்டும்.நாம் பாடசாலைகளிலும் , கல்லூரிகளிலும் பல சுதந்திர போராட்ட தியாகிகளின் கதைகளை படித்திருப்போம். ஆனால் அவர்களின் தியாகத்திற்கு, கிடைத்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்துகிறோமா என்பது விவாதத்திற்குரிய விஷயமாக தான் சென்று கொண்டிருக்கின்றது.

பெரும்பாடு பட்டு கிடைத்த இந்த சுதந்திரத்தை, சுதந்திர தினத்தின் போது எண்ணிப்பார்ப்பதோடு, அதை எப்படி சிறப்பாக நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவது என தொலைநோக்கு பார்வையோடு யோசிப்பது சகல பிரஜைகளினதும் கட்டாய கடமையாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வெளியிட்டுள்ள இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 72வது சுதந்திர தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவ்வாழ்த்து செய்தியில் தொடர்ந்தும், மத, பிரதேச வேறுபாடுகளைக் களைந்து நாட்டை வளமிக்கதாக உருவாக்க, ஒற்றுமையுடன் சகலரும் உழைக்க வேண்டுமென அறிவுறுத்தி உள்ளார். தொடர்ந்தும் நாட்டின் தனிச்சிறப்பான, வேற்றுமையில் ஒற்றுமை காணும் உணர்வைக் காக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ள அவர் இந்த நாட்டின் இறையாண்மை, கொள்கைகள், தனிநபர் சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட சகலரும் நம்பிக்கையுடன் உத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

- ஊடக பிரிவு -


No comments

note