Breaking News

கடையாமோட்டை  முஸ்லிம் மத்திய கல்லூரி இல்ல விளையாட்டுப் போட்டியில் அஸீஸ் இல்ல அணி சாம்பியன்


கடையாமோட்டை  முஸ்லிம் மத்திய கல்லூரியின் வருடார்ந்த (மெய் வல்லுநர்) இல்ல விளையாட்டுப் போட்டி இறுதி நாள் நிகழ்வு, கல்லூரி அதிபர் எம்.எச்.எம். தௌபீக் தலைமையில் 2020/02/07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 2:30 மணியலவில் மிக விமர்சையாக நடைபெற்றது. 

இதில்   அஸீஸ் இல்ல அணியினர் 595 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்திற்குத் தெரிவாகி, 2020 ஆம் ஆண்டுக்கான சாம்பியன் வெற்றிக்  கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது. 

இரண்டாம் இடத்திற்கு ஜாயா இல்ல அணியினர் 571 புள்ளிகளையும், மூன்றாம் இடத்திற்கு  அக்பர் இல்ல அணியினர் 502 புள்ளிகளையும், பெற்று, வெற்றிக் கிண்ணங்களைத் தமதாக்கிக் கொண்டனர்.

இல்லங்களின் வடிவமைப்பு

ஜாயா இல்லம் - சிவப்பு நிறம்.
பிரான்ஸ் பெரிஸ் நகரத்தில் அமைந்திருக்கும் Eiffel Tower அமைப்பைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இல்லம்.

அக்பர் இல்லம் - மஞ்சள் நிறம்.
ஒல்லாந்தர் காலத்தில் இலங்கையில் காணப்படுகின்ற கோட்டை அமைப்பைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இல்லம்.

அஸீஸ் இல்லம் - நீளம் நிறம்.
இலங்கையில் காணப்பட்ட (புராதன கிராமங்கள்) புராதன மனிதர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள், அவர்களுடைய குடிசைகள் எவ்வாறு இருந்தன அவர்களுடைய நடவடிக்கைகள் பற்றிய கருப்பொருளில் வடிவமைக்கப்பட்ட இல்லம்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மீன் வளம் மற்றும் நில மீன்பிடித் தொழில் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா மற்றும் சிறப்பு அதிதியாக முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எச்.எம். றியாஸ், எஸ். ஆப்தீன் எஹியா, கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் என்.எம்.ஹிஸாம் முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எச்.எம்.றிஸ்வி, எஸ்.எச்.எம்.றபீக்  ஆகியோருடன்

கௌரவ அதிதியாக புத்தளம் வலய கல்விப் பணிப்பாளர் டப்ளிவ்.பீ.எஸ்.கே. விஜேயசிங்க கலந்து சிறப்பித்தார்.

இன்றைய நிகழ்வில் புதிதாக பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மருத்துவபீட மாணவர்கள், முகாமைத்துவபீட மாணவர்கள், கலைபீட மாணவர்கள் அனைவருக்கும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 




















No comments

note