கல்முனை மாநகர சபை பிரதி மேயராக ரகுமத் மன்சூர் தெரிவு
(சர்ஜுன் லாபீர்)
கல்முனை மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர் ரகுமத் மன்சூர் அவர்கள் இன்று கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரை அறியாதவர்கள் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். சுமார் 17வருட காலம் இந்த மண்னிலே அபிவிருத்தி மழையையும் , வேலைவாய்ப்புகளையும்,உரிமை அரசியலையும் விதைத்த வித்தகர் மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் தவப்புதல்வர்தான் ரகுமத் மன்சூர் ஆவார்.இவர் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரும் கூட..
கட்சியின் தேசிய பிரதி ஒருங்கிணைப்பு செயலாளராகவும்,கட்சியின் உயர்பீட உறுப்பினராகவும்,தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் நெருக்கத்துக்கும் ,விசுவாசத்துக்கு,மரியாதைக்கும் உரியவராக செயற்பட்டு வருகின்றார்.
முன்னாள் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் இணைப்பு செயலாளராகவும். தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பதவி வகித்த நீதி அமைச்சு,நகர அபிவிருத்தி அமைச்சுகளிலும் இணைப்பு செயலாளராக கடமை புரிந்து இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?என்ற பழமொழிக்கு இணங்க தந்தையினால் விடுச்சென்ற அரசியலை தொட்டுச் செல்லும் ரகுமத் மன்சூர் முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக தெரிவுசெய்யப்பட்ட நிலையில் மக்கள் நல சேவைகள் பல செய்ய வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.
இன,மத பிரதேச வேறுபாடுகள் கடந்து தனது தந்தையின் அரசியல் வியூகத்தை தன்னகத்தே கொண்டு தாழ்ந்தவர்,உயர்ந்தவர்,ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி எல்லா மக்களை ஒன்றிணைந்து சேவையாற்றக்கூடிய செம்மல் ரகுமத் மன்சூர் ஆவார்
அரசியல் பின்புலம் உள்ள உயரிய குடும்பத்தில் பிறந்த ரகுமத் மன்சூர் மக்களோடு அன்பாகவும் பண்பாகவும் மென்மையாகவும் பழகும் ஆற்றல் மிக்கவர்.
தனது தலைமையின் கீழ் இயங்கும் ரகுமத் பவுண்டேஷன் நிறுவனத்தின் ஊடாக ஏழை எளிய மக்களுக்கு பல்வேறுபட்ட சேவைகளை செவ்வனே செய்து வருகின்றார்.இலவச குடிநீர் இணைப்புகள்,மின்சார வசதிகள்,வீடுகட்டுவதற்கான உதவிகள்,வாழ்வாதார மேம்பாட்டு உதவிகள்,மீனவர்களுகான உதவிகள்,சுய தொழில் முயற்சியாளர்களுக்கான உதவிகள்,பாடசாலை மாணவர்களுக்கான படிப்பு வசதிகளை மேம்படுத்துதல்,புலமைப்பரிசில், கா.பொ.தா (சா/தா),உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான இலவச முன்னோடி கருத்தரங்குகள்,போட்டிப்பரீட்சையில் தோன்றுபவர்களுக்கு முன்னோடி கருத்தரங்குகள் என பல்வகையான சேவைகளை செய்து வருகின்றார்.
மேலும் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கினாலும்,முயற்சியினாலும் 100 ற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments