Breaking News

நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு

பு/நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (21) பாடசாலை அதிபர் என்.எம்.எம். நஜீப் தலைமையில் இடம்பெற்றது.

இக்கட்டிடம் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் ஸ்த்தாபகருமான எஸ். ஆப்தீன் எஹியாவின் முயற்சியினால்
"மேர்சி லங்கா" நிறுவனத்தின் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட மேல் மாடிக் கட்டிடம் இன்று (21) உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக " மேர்ஸி லங்கா" நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர்  உஸ்தாத்  அப்துல்லாஹ் முனீர்  கலந்து கொண்டதுடன், 

சிறப்பு அதிதியாக பாடசாலையின் ஸ்த்தாபகரும், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான எஸ். ஆப்தீன் எஹியா கலந்து கொண்டார்.

விஷேட அதிதிகளாக கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைசர் மரிக்கார், திட்ட பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.ஆர்.எம். முனாஸ் (நளீமி) மேர்ஸி லங்காவின் உறுப்பினர்களான அஷ்ஷேக் ஹசன் சியாத் (நளீமி) , அஷ்ஷேக் எம்.பீ.எம். சௌக்கி (கபூரி) பொறியியலாளர் சவாஹிர், மற்றும் சட்டத்தரணி  ஏ.எச். நூஹ்மான் ஆகியோருடன் 

பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

















No comments

note