Breaking News

பதிவு செய்வதற்கு விண்ணப்பித்த கட்சிகள் இம்முறை தேர்தலில் போட்டியிட முடியாது

தேர்தல் ஆணைக்குழுவில் புதிதாக பதிவு செய்வதற்கு விண்ணப்பித்த கட்சிகள் இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட உள்வாங்கப்படவில்லை எனவும் சுயேச்சையாகப் போட்டியிட இக்கட்சிகளுக்கு தடைகள் இல்லையென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 

புதிய கட்சிகளை பதிவு செய்வதற்காக அறிவிக்கப்பட்ட காலப் பகுதியில் 150க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. பாராளுமன்றம் அடுத்த வாரமுற்பகுதில் கலைக்கப்படக் கூடிய வாய்ப்புக் காணப்படுவதால் வேட்பு மனுக்கள் ஏற்கும் காலத்துக்கு முன்னர் இந்த விண்ணப்பங்களை பிரசீலித்து முடிவெடுப்பதற்கு கால அவகாசம் போதாதுள்ளது.இதன் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். 

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட 52 நாட்களுக்கும் 66 நாட்களுக்குமிடையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன் பிரகாரம் ஏப்ரல் 22க்குப் பின்னர் மேமாதம் 04 ஆம் திகதிக்கிடையில் தேர்தலை நடாத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தேர்தல் தொடர்பில் கலந்துரையாட நேற்று கட்சிகளின் செயலாளர்களை சந்திப்பதற்கு முன்னர் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் போதே ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இவற்றைத் தெரிவித்தார்.




No comments

note