Breaking News

நாட்டின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தளம் நகரில் மரநடுகை வேலைத்திட்டம்.

அனைத்து பல்கலைகழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் (AUMSA) சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக இவ்வாண்டும் மரநடுகை வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்தது. தலைநகரில் மட்டுமல்லாது நாட்டின் பல பாகங்களிலும் இந்நிகழச்சி அவ்வாவ் பிரதேச பல்கலைகழக மாணவர் ஒன்றியங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் புத்தளம் பல்கலைகழக மாணவர் அமைப்பு (UGA - Puttalam)ம் புத்தளம் நகரில் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு Mission Green Sri Lanka அமைப்பும் மரங்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்கியது. மேலும் சிலர் பணமாகவும் மரங்களை தந்துதவியும் இந் நற்காரியத்தில் பங்குகொண்டனர்.

புத்தளம் ஸாஹிரா கல்லூரியில் கல்லூரி அதிபர், கல்லூரி சுற்றாடல் கழக பொறுப்பாசிரியர் மற்றும் கழக மாணவர்கள், காசிமிய்யா அரபுக்கல்லூரியின் மாணவர்கள் மற்றும் 30-40 பல்கலைகழக மாணவர்களின் பங்களிப்போடு நிகழ்வு ஆரம்பமானது. இதற்கு விசேடமான ஒருவரும் அழைக்கப்பட்டிருந்தார். அவர், நகரின் அழுக்காக கிடந்த ஒரு குறிப்பிட்ட பகுதியை (வெட்டுக்குளம்) தன் சொந்த முயற்சியால் மரங்களை நாட்டுவித்து அவற்றை பராமரித்து அழுக்காக கிடந்த அந்த இடத்தை பூத்துகுழுங்கும் இடமாக மாற்றிய பசுமை புரட்சியாளர் சாகோ.Ziyaad.

கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட மரங்களை ஸாஹிரா கல்லூரி, மன்னார் வீதி மாரி அம்மன் கோவில், காசிமிய்யா அரபுக்கல்லூரி மற்றும் புத்தளம் கொழும்பு வீதி பௌத்த விகாரையிலும் நடப்பட்டன.

இதே வேளை தில்லையாடி பாடசாலையிலும் மரநடுகை நிகழும் Shield  அமைப்பின் ஏற்பாட்டில் UGA-Puttalam அமைப்பின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. இதில் நான்கு மதத்தலைவர்களும் பங்குகொண்டனர்.

கல்லூரியில் நாட்டபட்ட ஒவ்வொரு மரமும் கல்லூரியின் சுற்றாடல் கழக மாணவர் ஒவ்வொருவருக்கும் பொறுப்புகொடுக்கப்பட்டத்தொடு அவர்களின் கைகளால் மாட்டுவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

-முஹம்மத் அஸாம்-
















No comments

note