Breaking News

மாத்தளை ஸாஹிரா தேசியபாடசாலையின் 52 ஆவது இல்ல விளையாட்டுப்போட்டி பிரதம அதிதியாக சிப்லி பாறூக் பங்கேற்பு.

நேற்று 15.02.2020 மாத்தளை சாஹிரா தேசியப்பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற 52 ஆவது இல்ல விளையாட்டுப்போட்டியில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் மாத்தளை ஸாஹிரா கல்லூரியின் பளைய மாணவருமான பொறியியலாளர் சிப்லி பாறூக் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இன்னிகழ்வு கல்லூரியின் அதிபர் என்.எம். சித்தீக் அவர்களின் தலைமையில் மிக விமர்சையாக இடம்பெற்றது இன்னிகழ்வில் ஜின்னா இல்லம், ஜாயா இல்லம், இக்பால் இல்லம், அசாட் இல்லங்கள் பங்கேற்றிருந்தன. இறுதி நிகழ்வுவரை மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்தப்போட்டியில் 247 புள்ளிகளைப்பெற்று ஜாயா இல்லம் 2020 இற்கான சம்பியனாக வெற்றிபெற்றதுடன் 245 புள்ளிகளைப்பெற்று இக்பால் இல்லம் இரண்டாம் இடத்தையும் தட்டிச்சென்றது.

இன்னிகழ்வின்போது பிரதம அதிதியாக கலந்துகொண்ட சிப்லி பாறூக் அவர்களுக்கு 52 ஆவது இல்ல விளையாட்டுப்போட்டி சார்பான நினைவுச்சின்னம் ஒன்றும் கல்லூரி அதிபரால் வழங்கிவைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இன்னிகழ்வில் கௌரவ அதிதியாக எம்.சீ. சாகிர் அஹமட் அவர்களும், விசேட அதிதியாக மசாக்கீன் எம். முயீன் அவர்களும், கல்விகாரியாலயம் சார்பான அதிதியாக எம்.ஆர்.யூ. றில்வான் அவர்களும், மேலும் ஏனைய பாடசாலை அதிபர்கள், ஸாஹிராவின் பழைய அதிபர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பாடசால நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ஊடகப்பிரிவு:












No comments

note