Breaking News

பன்முக ஆளுமை கொண்ட ஆசானை இழந்து நிற்கிறோம் - அஷ்ஷேய்க் பசுலுல் பாரிஸ் (நளீமி).

பெருக்குவற்றான் அல்மின்ஹாஜ் மு.ம. வித்தியாலய ஆசிரியர் முஹம்மது ஷரீப் முஹம்மது மஹ்ரூப் ஆசிரியரின் மறைவிற்கு அஷ்ஷேய்க் பசுலுல் பாரிஸ் (நளீமி) தனது அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.எம்.மஹ்ரூப் இரண்டு மாணவப் பரம்பரையின் ஆசான். ஆசானுக்குரிய இலக்கணம். மாணவ சமுகத்தின் நலனில் அதிக ஈடுபாடும் அக்கறையும் கொண்டவர். மூத்தவர் ; முதிர்ச்சி மிக்கவர்.

பன்முக ஆளுமை கொண்டவர்; எழுத்தாளர், பேச்சாளர், இலக்கியத் துறை விமர்சகர், கவிஞர், நாடகக் கலைஞன், உளவள ஆலோசகர் இவை எல்லாவற்றுக்கும் அப்பால் அவரது தலையில் ஒரு நூலகமே இருந்தது. தேசிய, சர்வதேச வரலாற்றுத் தகவல்கள் அவரிடம் நிரம்பியிருந்தன.

முன்மாதிரி மிக்க ஆசான்; கடமையிலும் கற்பித்தலிலும் நேரந் தவறாதவர். மாணவர்களின் நெளிவு சுழிவுகளை இனங்கண்டு நெறிப்படுத்தி வழிகாட்டுபவர். தனது துறையில் ஆசிரிய வாரிசுகளை உருவாக்கியவர்.
வாழ்க்கைப் போராட்டத்தை துணிச்சலோடு எதிர்கொண்டவர்.வரவையும் செலவையும் கச்சிதமாக முகாமை செய்தவர். கொடுக்கல் வாங்கலில் அதிநேர்மையோடு நடந்துகொண்டவர். திருப்பிச் செலுத்துவதற்கு ஏற்பாடுகள் இருந்தால் மட்டுமே கடன் பெறுபவர்.
பணபாட்டுள்ள பிள்ளைகளை உருவாக்கிய தந்தை.

இன்று அவரை நாம் இழந்து நிற்கிறோம். அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து, அவரது பணிகளை அங்கீகரித்து ஜன்னதுல் பிர்தவ்ஸை வழங்குவானாக. அவரது மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் அனைவருக்கும் மன ஆறுதலை வழங்குவானாக.


No comments

note