Breaking News

கனமூலை தெற்கில் தாய் சேய் சுகாதார பரிசோதனை நிலையம் திறந்து வைப்பு.

கனமூலை மக்கள் கண்டுள்ள மற்றுமொரு வெற்றி.

கனமூலை தெற்கு கிராம சேவகர் பிரிவில் வாழும் மக்கள் தமது சுகாதார தேவைகளுக்காக (குழந்தைகளை நிறுத்தல், கர்ப்பிணி தாய்மார் பரிசோதிப்பு) பல்வேறு பிரதேசங்களுக்கு சென்று வருவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வந்தனர்.

இந்நிலையை மாற்றி கனமூலை தெற்கு கிராம சேவகர் பிரிவில் தம்பிராசப்பா ஒழுங்கையில் கட்டார் நாட்டை சேர்ந்த ஒருவரின் நன்கொடை மூலம் இலங்கையின் கடார் நிதியத்தினூடாக நிறுவப்பட்டு 27-12-2019 கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் பணிக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஊர் பிரமுகர்களுடன் கட்டார் நிதியத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஹாலித் ஹவ்த் வடமேல் மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் முஹம்மத் பரீத் , முந்தல் பிரதேச சுகாதார அதிகாரி வைத்தியர் ஜவ்சிக் மற்றும் சுகாதார ஊழியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

எதிர்காலத்தில் இச்சுகாதார நிலையத்தை மேம்படுத்த சகல ஒத்துழைப்பும் வழங்குவதாக வடமேல் மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்ததுடன் இதற்கு போதுமான இடங்களை வழங்க மக்கள் முன்வர வேண்டும் என வேண்டிக்கொண்டார்.













No comments

note