Breaking News

தலைமைத்துவம் தொடர்பில் தீர்மானிக்க ஐக்கிய தேசிய கட்சி இன்று விசேட கூட்டம்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் மற்றும் கட்சி நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

இதன்போது கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளதாக கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்த்துளார்.

இந்த சந்திப்பு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் தலைமையில் இடம்பெறவுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.







No comments

note