Breaking News

தமக்கு வாக்களிக்காதவர்கள் தொடர்பாக கோத்தா - சஜித் சுய பரிசீலனை செய்ய வேண்டும் - ரவூப் ஹக்கீம்.

சிங்­கள பௌத்த வாக்­குகள் பெரு­வா­ரி­யாக  கிடைக்­கா­தது குறித்து ஐக்­கிய தேசியக் கட்­சியும் சிறு­பான்மை வாக்­குகள் குறிப்­பிட்­ட­ளவு கிடைக்­காமை தொடர்­பாக ஜனா­தி­ப­தியும் சுய வி­சா­ரணை செய்துகொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்கிழமை எதிர்க்­கட்­சி­யால் கொண்­டு­வரப்பட்ட ஜனா­தி­ப­தியின் கொள்கைப் பிர­க­டன உரை மீதான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையின் இரண்­டாம் நாள் விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், 

ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியை பிரதிநிதி­த்­து­வப்­ப­டுத்தி போட்­டி­யிட்ட சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு சிங்­கள மக்­களின் பெரும்­பான்­மை­யாக கிடைக்­க­வேண்டியிருந்த வாக்­குகள் ஏன் கிடைக்­கப்­பெ­ற­வில்லை என்­பதை ஐக்­கிய தேசியக் கட்சி திரும்­பிப்­பார்க்­க­ வேண்டும். அதேபோல் ஜனா­தி­பதி கோத்­தபாய 

ராஜ­பக் ஷ­வுக்கு குறிப்­பி­டத்­தக்க சிறு­பான்மை மக்­களின் வாக்குகள் கிடைக்­கா­மை தொடர்­பா­கவும் சுய ­வி­சா­ரணை செய்­யப்­ப­ட­வேண்டும். அவ்­வாறு 

இல்­லாமல் குறிப்­பிட்ட ஒரு அணிக்கு ஆத­ர­வாக செயற்­பட்­ட­வர்­களை அடிப்­ப­டை­வா­தி­க­ளாக சுட்­டிக்­காட்ட முற்­ப­டு­வதில் எந்த அர்த்­தமும் இல்லை. ஸ்திர­மற்ற அர­சுகள் உரு­வா­வதை தடுக்க விகி­தா­சார தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும தெரி­வித்­தி­ருந்தார். பாரா­ளு­மன்­றத்தில் எண்­ணிக்­கையில் சிறிய வேறு­பா­டுகள் 

ஏற்­ப­டும்­போது இணக்­கப்­பாட்டு அர­சுகள் உரு­வா­வது பாத­க­மா­ன­வை­யல்ல. அதே­வேளை அதி­ பெ­ரும்­பான்­மை­யுடன் அமைக்­கப்­பட்ட அர­சு­களால் நாட்­டுக்கு பாதிப்­புகள் ஏற்­பட்­டி­ருப்­ப­தையும் மறக்­க­ மு­டி­யாது. 

நானும் தற்­போது இராஜாங்க அமைச்­ச­ராக இருக்கும் வாசு­தேவ நாண­யக்­கா­ரவும் ஒரே அமைச்­ச­ர­வையில் இருக்­கும்­போது, அன்று தேசிய கீதத்தை தமிழில் இசைப்­பதை தடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­த­போது அதற்கு எதி­ராக  குரல் கொடுத்தோம். ஆனால் அந்த பிரச்­சினை மீண்டும் தலை­தூக்க ஆரம்­பித்­துள்­ள­தா­கவே தெரி­கின்­றது. 

 இன­வாத அடிப்­ப­டை­யி­லான அர­சியல் கட்­சி­களை நிரா­க­ரிக்­க­ வேண்டுமென 

ஜனா­தி­ப­தி உரையில் தெரி­வித்­தி­ருந்தார். ஜனா­தி­ப­தி உரையின் உள்­ள­டக்­கத்தின் உண்­மை­யான விட­யங்­களை செயற்­ப­டுத்­து­வ­தற்கு நாங்கள் ஆத­ர­வ­ளிக்­கின்றோம். அதே­நேரம் ஒரு கட்­சியின் பெயரில் தனது இனத்தின் பெயர் இருப்­பதன் மூலம் அந்தக் கட்சி இன­வாதக் கட்சி என தெரி­விக்க முற்­ப­டு­மாக இருந்தால் அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.   சிங்­களம் மாத்­திரம் நிலைப்­பாட்டில் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்­டா­ர­நா­யக்க கட்சி உரு­வாக்கி வெற்றி பெற்றார். சிங்­களம் மட்டும் என்ற பிர­சாரம் விகாரை தோறும் அன்று மேற்­கொள்­ளப்­பட்­டது. இவ்­வாறு மேற்­கொள்­ளப்­பட்­டது மொழியின் மீது இருந்த ஆர்­வத்­திலா? அல்­லது அதி­காரம் மீது இருந்த மோகத்­திலா? என்­பது 

வர­லாற்றை திருப்­பிப் ­பார்ப்­ப­வர்­க­ளுக்கு தெரியும். அதனால் நாங்கள் மீண்டும் கடந்த காலத்­துக்கு செல்­ல­ வேண்­டி­ய­தில்லை.

  சிங்­கள பெளத்த மக்­களின் வாக்­கு­களால் வெற்­றி­பெறும் நிலை ஏற்­பட்­டது என ஜனாதிபதி தெரிவித்த கருத்து உண்மையாகும். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதேபோன்று இனவாத அரசியலுக்கு இடமளிக்க வேண் டாமென  கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி கோரியிருந்தார். ஆனாலும் எந்த அரசியல் கொள்கையை பெரும்பான்மை சிங்கள மக்கள் மீது பிரசாரம் செய்து ஜனாதிபதி வெற்றிபெற்றார் என்பதும் எல்லோருக்கும் தெரியும் என்றார்.

ஊடகப்பிரிவு

No comments

note