Breaking News

இன்று வரையப்படும் சுவர் ஓவியங்களில் நம் அடையாளம் என்ன? - அஸாம் முஹம்மத்.

நாட்டில் உள்ள பொதுச் சுவர்களில் கருத்தோவியங்கள் வரைந்து வருவது இன்று Trend ஆகி உள்ளது. உண்மையில் இது மகிழ்ச்சியான வரவேற்க்கப்படும் விடயமாகும். அழுக்கான சுவர்கள் அழகுப்படுத்தப்பட்டுள்ளன. இம் முயற்சியை ஆரம்பித்து வைத்த மதிப்பிற்குரிய  ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்.

ஆயினும் இக்கருத்தோவியங்கள் தங்கள் எல்லைகளை கடந்து இனவாதத்தை கக்கும் சாயலாக உருவெடுத்துள்ளமை மிகவும் ஆபத்தானதே ஆகும்.ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக காட்ட முற்படுவதும் அவர்களை தேசத்தின் எதிரிகளாக அடையாளப்படுத்த முனைவதும் பொருத்தமற்ற செயன்முறையே..!  இதனால் வளர்ந்து வரும் தலைமுறையினரின் உள்ளங்களில் இனவாதம் நஞ்ஞேற்றப்படுகின்றது.

இவைகள் வெறுமனே சுவர் ஓவியங்கள் தான்  என்று நாம் அலட்சியமாக இருந்து விடவும் முடியாது. காரணம் வரலாற்றை உண்மைப்படுத்தும் அச்சாணியாக ஓவியங்கள் திகழ்கின்றன. நிகழ்காலங்களில் இறந்தகால ஓவியங்களை அடிப்படையாக வைத்தே எதிர்காலம் பற்றிய முடிவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. இதற்கு உதாரணமாக இலங்கையில் காணப்படும் பிரபலமான சீகிரிய ஓவியத்தில் காசியப்பனின் வரலாறும், சமூக முறையும் ,அழகியல் பண்பாட்டு அம்சங்களையும் அறிந்து கொள்ளும் ஓர் ஊடகமாகவே இவ் ஓவியங்கள் திகழ்கின்றன.
எதிர்காலங்களிலும் அவ்வாறே திகழும்.

அதேப்போல் இலங்கையில் நூறு வருடங்கள் கடந்து வரும் எதிர்கால தலைமுறையினர் இவ் ஓவியங்களை பார்க்கின்றபோது முஸ்லிம் சமூகத்தினர் இந் நாட்டின் எதிரிகளாக அச்சுறுத்தப்படாலம்.... அண்மையில் கூட முன்னால் அமைச்சர் ரிஷாத் பத்தியுத்தீன் அவர்களை நேரடியாக தாக்கும் சுவர் ஓவியங்களுக்கு உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே நாம் இவ் சுவர் ஓவியங்களில்  சற்று கவனம் செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

மேலும்
அமெரிக்காவுடன் எம்.சி.சி ஒப்பந்தத்தில் அரசாங்கம் கையெழுத்திட்டதை எதிர்த்து
தலவதகுட சாலையில் உள்ள பெடகானாவில் உள்ள கீல்ஸ் சூப்பர் ஸ்டோர் அருகே சுவரில் எரங்கா ஸ்ரீமல் என்ற இளைஞர்களின் குழு வரையப்பட்டுள்ளது. அழகியல் பல்கலைக்கழகத்தின் ஆசிரியரும், அப்பகுதியில் உள்ள இளைஞர்களின் ஒரு குழுவும் இந்த ஸ்தூபத்தை உருவாக்க ஆறு பகல் மற்றும் இரவுகளில் கடுமையாக உழைத்ததாகக் கூறுகிறார்கள். இருப்பினும்,  இந்த அற்புதமான தெரு ஓவியம் சுவரில் வர்ணம் பூசப்பட்டு அழகான உருவத்தை அழித்துவிட்டது.

ஜனநாயகம் என்பது
மற்றவர்களின் கருத்துக்களுக்கும், சிந்தனைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதே! ஆனால் இன்று இந் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

ஆகவே சுவர் ஓவியங்களை வரைய இருக்கும் இளைஞர்கள், ஆசிரியர்கள்,கலைஞர்கள் இவ் ஓவியத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு ஓர் நற் செய்தியை,விளிப்புனர்வை ஏற்படுத்துகின்ற ஊடகமாக பயன்படுத்தி இனத்துவமற்ற, கலாச்சார பாரம்பரியங்களை பறைசாற்றுகின்ற, நாடு வேண்டி நிற்கும் மாற்றங்களை உள்ளடக்கிய கருத்தோவியங்களை வரைவதன் மூலமாக மக்களின் மனோநிலையின் மாற்றங்களை கொண்டு வர முடியும்.

Azam Muhammed
Eastern university srilanka.





No comments

note