கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியை மலினப்படுத்தும் புத்தளம் தனியார் கல்வி நிலையங்கள்
இம்முறை வெளியாகிய கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் கடயாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இருந்து நான்கு மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்கள்.
குறிப்பிட்ட மாணவர்களின் பெறுபேற்றுக்கு புத்தளத்தில் இயங்கிவரும் பிரேத்தியேக தனியார் வகுப்பு ஆசிரியர்கள் உரிமை கோருவதானது "ஊரான் கோழி அறுத்து உம்மா பேரில் கத்தம் ஓதுவது போன்றாகும்".
க.பொ.த. சா/த பரீட்சை எழுதிய மாணவர்கள் தமது பரீட்சை பெறுபேறு வரும்வரை புத்தளம் தனியார் கல்வி நிலையங்௧ளுக்கு செல்வது வழமை இது போன்றே இம்மாணவர்களும் சென்றுள்ளனர்.
இதனை வைத்துக் கொண்டு தாம் தமது கல்வி நிலையத்தில் கல்வி பயின்றதாலே வைத்திய பீடத்திற்கு தெரிவாகியுள்ளனர் என்றும் கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு கல்வி கற்க்க செல்ல வேண்டாம் எனவும் அங்கு சிறந்த பெறுபேற்றை பெறமுடியாது என கோரியிருப்பது அக்கரபத்து பிராந்தியத்திலே வளர்ந்து வரும் கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியை மலினப்படுத்தும் நோக்கிலே இவர்களுடைய கருத்து அமைந்துள்ளது.
மேற்குறிப்பிட்ட மாணவர்களின் பெறுபேற்றுக்காக இரவு பகலாக பாடுபட்டு உழைத்த மத்திய கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், இதற்காக பல இலட்சங்களை செலவு செய்துள்ள கல்லூரியின் விஞ்ஞான போரம் இருக்கதக்க புத்தளத்தில் இயங்கிவரும் தனியார் வகுப்பு ஆசிரியர்கள் உரிமை கோருவதானது நியாயமானதா....?
No comments