கல்விக்கு உரமூட்டும் கராத்தே பயிற்சி. கிழக்கு மாகாண முஸ்லிம் பெற்றார்களே !
கிழக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான முஸ்லிம் பெற்றார்கள் தங்களது புதல்வர்களை கராத்தே பயிற்சிக்கு அனுமதிப்பதில்லை. அது கல்வி கற்பதற்கு தடையாகிவிடும் என்றும், அது ஓர் தீண்டத்தகாத செயல் என்ற முட்டாள்தனமான சிந்தனையும்தான் அதற்கு காரணமாகும்.
பெற்றாரின் விருப்பமின்றி ஏராளமான மாணவர்கள் என்னிடம் கராத்தே பயிற்சி செய்து தேசிய ரீதியில் பதக்கங்களை பெற்றிருப்பதுடன், கல்வியிலும் அதியுயர் பெறுபேறுகளை பெறுவது வழமையாகும்.
தமது புதல்வர்கள் கல்வி கற்கவேண்டும் என்பதில் இருக்கின்ற ஆர்வம் நியாயமானது. அத்துடன் தங்களது பிள்ளைகளின் உடல், உள ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
கராத்தே பயிற்சி பெறுவதனால் உடல் ஆரோக்கியம், ஞாபக சக்தி அதிகரித்தல், தன்னம்பிக்கை, உடல் பலம், மனோ வலிமை, ஒழுக்கம் போன்ற நண்மைகள் கிடைக்கின்றது என்பதனை இவ்வாறான பெற்றார்கள் அறியாமலிருப்பது ஆச்சர்யமாகும்.
அந்தவகையில் இந்தவருடம் உயர்தர பரீட்சையில் எனது சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் கராத்தே பயில்கின்ற மாணவர்களான ஏ.கே.எம். ஹஸ்னத்கான் (Black Belt) Engineering Technology புதிய பாடத்திட்டத்தில் District Rank – 3, எம்.ஏ.எம். அல்தாப் பழைய பாடத்திட்டத்தில் District Rank – 5, மற்றும் பீ.எம்.தனீஸ் District Rank – 21 ஆகிய நிலையினை பெற்று அதி சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளார்கள்.
தங்களது உயர்தர பரீட்சை காலங்களிலும் பலதரப்பட்ட சுற்றுப்போட்டிகளில் இம்மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
குறிப்பாக கறுப்புப்பட்டி மாணவரான ஹஸ்னத்கான் தனது உயர்தரம் இறுதி ஆண்டு காலத்திலும் மாகான போட்டிகள், மற்றும் கொழும்பில் நடைபெற்ற தேசிய போட்டிகளிலும் பங்குபற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கராத்தே விளையாட்டானது கல்விக்கு உரமாக அமைவதுடன், அது யாரையும் தாழ்த்தியதில்லை என்பதனை கிழக்குமாகாணத்தில் உள்ள முஸ்லிம் பெற்றார்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன்.
Mughammeth Ikbal
Chief Instructor
International Martial arts Association
Sri Lanka Branch

No comments