Breaking News

யாழ் முஸ்லிம்கள் புத்தளம் வைத்தியசாலைக்கு உதவி

புத்தளத்தில் வாழும்   யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் புத்தளம் தள வைத்தியசாலைக்கு 17 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசிய  உபகரணங்களை அன்பளிப்பு செய்துள்ளனர். 

1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் குடியேறிய போது தங்களுடைய வளங்களை எம்முடன் பகிர்ந்து கொண்ட புத்தளம் வாழ் மக்களுக்கு பிரதியுபகாரம் செய்யும் நோக்கில்  இவை அன்பளிப்பு செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண வர்த்தக பிரமுகர்களான   சாகுல் ஹமீட் ஹாஜியார் மற்றும் அவருடைய மகன் நியாஸ் ஹாஜியார்,  நஸ்ருன் ஹாஜியார், நஜாத் ஹாஜியார் ஆகியோரின் உதவியுடன் யாழ் முஸ்லிம் மக்கள் அமைப்பினூடாக   புத்தளம் தள வைத்தியசாலைக்குத் தேவையான   (குளிர் சாதனப்பெட்டிகள், சக்கர நாற்காலிகள், நாற்காலிகள், விசிறிகள், வளிப்பதனாக்கிகள், பிளாஸ்டிக் மற்றும் மர இறாக்கைகள் போன்ற  பொருட்கள் அன்பளிப்பு செய்ய்யப்பட்டுள்ளன. 

புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் சுமித் அத்தநாயாகவின்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில்
யாழ்பான முஸ்லிம் மக்கள் அமைப்பின் உறுப்பினர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக்கு குழு செயலாளர் எச்.எம்.எம். சபீக்  உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


 யாழ் முஸ்லிம் மக்கள் அமைப்பு மற்றும்  யாழ் முஸ்லிம் விளையாட்டு கழகம் ஆகியன இணைந்து புத்தளம் வைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வொன்றினையும் ஏற்பாடு செய்திருந்தனர். 

யாழ் முஸ்லிம் மக்கள் அமைப்பினால் புத்தளம் வைத்தியசாலைக்கு பல சந்தர்ப்பங்களில் பல்வேறு வகையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

நன்றி - புத்தெழில்









No comments

note