பள்ளிவாசலுக்கு உரிய இடத்தில் புத்தர் சிலை வைப்பு, ஆளும்தரப்பு முஸ்லிம் அரசியல் வாதிகளை உடனடியாக தலையிட கோரிக்கை.
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கேகாலை மாவட்டத்திலுள்ள நெலுந்தெனிய, உடுகும்புற பிரதேச பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது.
புத்தர் சிலையானது பள்ளிவாசலுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு அருகில் (29) நடுநிசி 2.00 மணியளவில் இனந்தெரியாதோரால் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிவாசல் நிர்வாகம் பொலிஸில் முறைப்பாடு செய்த போது, தம்மால் ஏதும் செய்ய முடியாது எனவும் வழக்குத் தாக்கல் செய்யுமாறும் கூறியுள்ளனர்.
மிகவும் குறைந்தளவு முஸ்லிம்கள் வசிக்கும் இப்பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கருதுகின்றனர்.
இது குறித்து முஸ்லிம் அரசியல்வாதிகள், ஆளும் தரப்பு முக்கியஸ்தர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

No comments