Breaking News

தேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

பாறுக் ஷிஹான்

உயிர்த்த ஞாயிறு   தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பெயரில்  கைது செய்யப்பட்ட 63 பேரின் விளக்கமறியல் மீண்டும்  எதிர்வரும் டிசம்பர் 19  ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாத் தலைமையகம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் சஹ்ரான் காசீம் தலைமையில் இடம்பெற்ற  ஆயுத பயிற்சியில் பங்கேற்றதாக    சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் இன்று (21) ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் டிசம்பர் 19 ஆம் திகதி வரை மீண்டும்   விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்தார்.

இன்றைய விசாரணையில் போது   சந்தேக நபர்களாக 3 பெண்களும் ஆஜராகி இருந்தமை    குறிப்பிடத்தக்கது.









No comments

note