கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இம்முறை நான்கு வைத்திய துறை உட்பட 35 மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
க.பொ.த. உயர் தர பரீட்சையில் தற்போது வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் 35 மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகி பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்துள்ளனர்.
35 மாணவர்களில் விஞ்ஞானப் பிரிவில் 8வும், வர்த்தகப் பிரிவில் 22வும், கலைப் பிரிவில் 5 மாணவர்களும் தெரிவாகியுள்ளனர்.
இதில் வைத்த்திய துறைக்கு 4 மாணவர்கள் தெரிவாகியுள்ளதுடன், ஐயூப்கான் அப்ரா 2AB யை பெற்று மாவட்டத்தில் 10 ஆவது இடத்தையும், பஸீர் சர்ஜானா 2AC யை பெற்று மாவட்டத்தில் 14 ஆவதும் இடத்தையும், சாஜித் சஹான் 2AB யை பெற்று மாவட்டத்தில் 21 ஆவதும் இடத்தையும், மாஹிர் சமீஹா 2AB யை பெற்று மாவட்டத்தில் 26 ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
வர்த்தகப் பிரிவில் 22 மாணவர்களில் 9 மாணவர்கள் 3A சித்த்தியும், 6 மாணவர்கள் 2AB யும், 5 மாணவர்கள் A2Bயும், ஒரு மாணவன் 2AC சித்தியைப் பெற்றுள்ளனர்.
சித்திபெற்ற மாணவர்களை கல்லூரியின் அதிபர், ஆசிரியர்குழாம், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கம், பெற்றோர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
No comments